தளபதி விஜய் சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்கிய நிலையில், விஜய் எதிர்பார்க்காத நேரத்தில், ரசிகர்கள் செய்த குறும்புத்தனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 

தளபதி நடிப்பை தாண்டி, மெல்ல மெல்ல அரசியலில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாகவே தளபதி பட்டும் படாமல்... அரசியலுக்கு வியூகம் வகுத்து காய் நகர்த்தி வந்த நிலையில், இந்த ஆண்டு அதிரடியாக தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் விஷயங்களை செய்தார். அந்த வகையில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கியது மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.

இது மட்டும் இன்றி, விஜய் மக்கள் இயக்கம் மூலம் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நூலகம், பசி தினத்தில் மக்களுக்கு உணவு வழங்கியது, மற்றும் தலைவர்களின் பிறந்த நாளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தது என அடுத்தடுத்து பல விஷயங்களை செய்தார். அவ்வப்போது விஜய் மக்கள் இயக்கத்தினரை சந்தித்து பேசி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Thalapathy Vijay: ரூ.10 ஆயிரம் முதல்.. ரூ.1 லட்சம் வரை.. நிவாரண நிதியை மக்களுக்கு அள்ளிக்கொடுத்த தளபதி!

இந்நிலையில் இன்று நெல்லை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் விஜய். அப்போது ரசிகர்கள் சிலர் விஜய்யிடம் குறும்புத்தனம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இளம் வயது பெண் ஒருவர்... நலத்திட்ட உதவிகள் வேண்டாம் உங்களுடன் செல்ஃபி மட்டும் போதும் என விஜயுடன் செல்ஃபி எடுத்து கொண்டார்.

Scroll to load tweet…

இவரை தொடர்ந்து விஜய் பின்னால் இருந்து வந்த பெண் ஒருவர்... விஜயின் கையை தன்னுடைய தோல் மீது போட்டு புகைப்படம் எடுத்து கொண்டதோடு, விஜய்யின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டார். இது போல் பல ரசிகர்கள் மிகவும் குறும்பு தனமாக தங்களின் பாசத்தை விஜய் மீது காட்டினர். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Shanmuga Pandian: விஜயகாந்த் இறப்புக்கு பின்னர்... எமோஷ்னலாக ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!

Scroll to load tweet…