தளபதி விஜய், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை  நிவாரண நிதி வழங்கியுள்ளார்.  

தளபதி விஜய், விஜயகாந்த் மரணம் குறித்த தகவலை அறிந்ததுமே... ஹைதராபாத்தில் நடந்து வந்த 'தளபதி 68-ஆவது' படப்பிடிப்பில் இருந்து, விஜய் சென்னை திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் விஜயகாந்தின் பூத உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து இன்றைய தினம் தன்னுடைய அரசியல் பணியில் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளார்.

Shanmuga Pandian: விஜயகாந்த் இறப்புக்கு பின்னர்... எமோஷ்னலாக ஷண்முக பாண்டியன் போட்ட முதல் பதிவு!

சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய கையால் நிவாரண பொருட்களை வழங்க விஜய் ஏற்பாடு செய்திருந்த நிலையில், இதில் ஏராளமான பெண்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. 

Vijayakanth Movies: விஜயகாந்துக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட நடிகர்! அடுத்தடுத்து 5 சூப்பர் டூப்பர் ஹிட்!

மேலும் வீட்டை இழந்த மக்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. அதே போல் மழையால் உயிரிழந்த குடும்பத்திற்கு, 1 லட்சம் நிதியை அள்ளிக்கொடுத்தார் தளபதி. சமீப காலமாகவே அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், அதற்கான முன்னெடுப்பாகவே இப்படி பட்ட உதவிகளை செய்து வருவதாக பார்க்காடுகிறது. இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.