கைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கறுப்பு நிற கோர்ட், சூட்டில் சும்மா ஜம்முன்னு பங்கேற்றார் விஜய். மேலும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், சாந்தனு, இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு ஹிட்டாகின. இந்நிலையில் நடிகர் விஜய் மீது பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல் அந்நிகழ்ச்சியில் தோற்று வெளியேறியது வரை சோசியல் மீடியாவில் மீரா மிதுன் செய்து வரும் அட்ராசிட்டிகளுக்கு அளவில்லை. முன்னழகு, பின்னழகு, டாப்லெஸ், பட்டன் லெஸ் என அனைத்து விதமான கவர்ச்சி போஸ்களையும் கொடுத்து விட்டார். அந்த கன்றாவி போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் கழுவி ஊத்தினாலும் அதை கண்டுகொள்வதில்லை. 

அப்படிப்பட்ட ஹாட் புகைப்படங்களால் வைரலாகி வந்த மீரா மிதுன், சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தனது போட்டோ ஷூட்களை பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரைப்பிரபலங்கள் பலரும் காப்பியடிப்பதாக போட்டாரே ஒரு போடு. அதோடு நிறுத்தமால் கையில் சிவப்பு நிற செல்போன் கவர் தெரிய செல்ஃபி போட்டோ வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, பெயர் குறிப்பிடாமல் தாறுமாறாக திட்டி தீர்த்தார். அதனால் லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மீரா மிதுன் மீது செம்ம காண்டில் உள்ளனர். அது போதாது என்று தற்போது தளபதி ரசிகர்களை சீண்டியுள்ளார். 

இதையும் படிங்க: இதுக்கு டிரஸ் போடாமல் போஸ் கொடுத்திருக்கலாம்... பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்....!

மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை எனது போட்டோவை பார்த்து தான் விஜய் காப்பியடித்தார் என்று கூறி அனைவரது கடுப்பாக்கியும் அதிகரித்துள்ளார். போட்டோவுடன் மீரா மிதுன் போட்டுள்ள ட்வீட்டில் “மாஸ்டர் டீம் வெளியிட்ட இரண்டாவது போஸ்டர் என்னோட போட்டோவ பாத்துதான் காப்பியடிச்சிருக்காங்க. நா டிசம்பர் மாசத்திலேயே இதே போஸ்ல கிங் பிஷர் கம்பெனி போட்டோஷூட்ல போட்டோ எடுத்திருக்கேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!

இதையெல்லாம் நாங்க ப்ரீ-கே.ஜி.லையே பண்ணிட்டோம். அப்போ சொல்லுங்க யாரு யார்கிட்ட இருந்து காப்பியடிச்சதுன்னு நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கொசு தொல்லை தாங்க முடியல, ஓடிடு என விஜய் ரசிகர்களும் சகட்டு மேனிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.