தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இளைய தளபதியில் இருந்து தளபதியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென்மாநிலம் முழுவதுமே தளபதி விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஜூன் 22ம் தேதி வர உள்ள  விஜய்யின் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட தளபதி ரசிகர்கள் தீவிரமாக திட்டம் தீட்டி வந்தனர். 

இதையும் படிங்க: நயன்தாராவின் பளபளக்கும் அழகிற்கான ரகசியம்... 35 வயதிலும் சும்மா நச்சுன்னு இருக்க காரணம் இதுதான்...!

ஆனால் விஜய்யோ கொரோனா நேரத்தில் மக்கள் அனைவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதால், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தனது ரசிகர் மன்றங்களுக்கு அன்பு கட்டளை போட்டுள்ளார். அதே சமயத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் சற்றே அப்செட்டான தளபதி வெறியன்ஸ், சோசியல் மீடியாவிலாவது வேற லெவலுக்கு கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர். 

அதன்படி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் காமென் டி.பி. வெளியாகியுள்ளது. மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வரலட்சுமி சரத்குமார், அஜய் ஞானமுத்து, காஜல் அகர்வால், சஞ்சீவ், சாந்தனு உட்பட 20 பிரபலங்கள் விஜய்யின் காமென் டி.பி.யை வெளியிட்டுள்ளனர். செம்ம ஸ்டைலாக கோட், சூட்டில்  கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் விஜய் போட்டோவுடனான அந்த டி.பி, இதுவரை 4.7 மில்லியன் ட்வீட்களை பெற்று சாதனை படைத்து வருகிறது. 

இதையும் படிங்க: சிக்கென ஸ்லிம் லுக்கில் நயன்தாரா.... புடவையில் இதுவரை யாருமே பார்த்திருக்காத ஸ்பெஷல் போட்டோ ஷூட்...!.

இதையடுத்து #THALAPATHYBdayFestCDP மற்றும் #Master ஆகிய ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் பட அப்டேட் ஏதாவது வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் பட ரிலீஸ் தேதி முடிவான பிறகு தான் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வரும் என லோகேஷ் கனகராஜ் சொல்லிவிட்டார். அதனால் இப்போதைக்கு சோசியல் மீடியாவிலாவது தளபதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தெறிக்கவிட ரசிகர்கள் முடிவுசெய்துள்ளனர்.