நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற உள்ளதாகவும், அதற்காக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, டெல்லியில் உள்ள அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தீயாய் பரவின. 

ஆனால் இது முற்றிலும் வதந்தி என மறுத்துள்ள விஜய்யின் மக்கள் செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமது, கட்சியின் பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய் என்ற செய்தி தவறானது என்றும் விளக்கமளித்திருந்தார். ஆனால் விஜய் கட்சியை பதிவு செய்ய உள்ளதாக கடிதம் ஒன்று வெளியான நிலையில், அது எப்படி பொய்யாக இருக்க முடியும் என குழப்பங்கள் எழுந்தது. இதனிடையே விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த விளக்கம் அனைவரையும் தலைசுற்ற வைத்துள்ளது. 

 

இதையும் படிங்க: காதல் கணவருக்கு லிப் லாக் கொடுத்த காஜல் அகர்வால்

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் பெயரில் தொடங்கப்பட்டுள்ள கட்சிக்கும், அவருக்கும் தொடர்பில்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்துள்ளது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.