"பிகில்" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த தளபதி 64 படத்திற்கு "மாஸ்டர்" என அதிகாரப்பூர்வ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியான நிலையில் தளபதி ரசிகர்கள் அதை வேற லெவலுக்கு கொண்டாடி வருகின்றனர். 

நெல்லையில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் "மாஸ்டர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திரையிடப்பட்டது. அப்போது தளபதியின் மாஸ் லுக்கை புகைப்படம் எடுப்பதற்காக அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக செல்போன் உடன் எழுந்து நிற்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதேபோல மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தளபதியின் வெறித்தனமான ரசிகர்கள் அதை தங்களது செல்போன் பின்புறம் புகைப்படமாக வைத்து கொண்டாடி வருகின்றனர். 

மேலும் பல்வேறு இடங்களில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் போஸ்டருக்கு தாறுமாறு வரவேற்பளித்துள்ளனர். மாஸ்டர் ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி வரும் நிலையில், தளபதி ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாடமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.