விஜய் பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்... தளபதி ரசிகர்களின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்

ஈரோட்டில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி உள்ளனர்.

Thalapathy Birthday Erode vijay fans gifted gold ring to new born babies

ஈரோடு மாவட்டத்தில் விஜய் பிறந்த நாளையொட்டி இன்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் அணிவித்தும், ரத்த தானம் வழங்கியும், தமிழகத்திலேயே முதன்முறையாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் காமராஜர் வாழ்வியல் குறித்த புத்தகங்களை விஜய் ரசிகர்கள் வழங்கி நற்பணியுடன் வெகு விமர்சையாக விஜய் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்..!

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர் மன்றத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத் தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில், ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் பரிசாக அணிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... அரசுக்கு போட்டியாக தனியார் இலவச பஸ் சேவை... தமிழகம், கேரளாவில் கெத்து காட்டிய விஜய் ரசிகர்கள்

அதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ரத்ததானம் வழங்கினர். மேலும், ஈரோடு எஸ்.கே.சி சாலையில் உள்ள காமராஜர் பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும் அங்குள்ள  நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், காமராஜர் ஆகியோரின்  உரைகள், அவர்கள் எழுதிய புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டன. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் பாலாஜி, "எங்களது தலைவர் அறிவுறுத்தலின் அடிப்படையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலைவர்களின் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளோம். அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களது கருத்துக்கள் பள்ளி மாணவ மாணவி சென்றடைய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்" என்று கூறினார்.

இந்நிகழ்வுகளில், இளைஞர் அணி கார்த்தி ஈரோடு மாநகர செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் அருண் ,கார்த்திக், குமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், ஈரோடு மாநகர தலைமை மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு ஆஸ்பத்திரியில் இன்று காலை மாநகர தலைவர் அக்கீம் தலைமையில் 50 பேர்  ரத்த தானம் செய்தனர். ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் விசேஷ பூஜைகள் நடந்தது ஈரோடு ராஜாஜிபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் இல்லத்திலும் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் அருகில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் பிறந்தநாள்... திருச்சி கோவிலில் வெள்ளி தேர் இழுத்து வழிபட்ட ரசிகர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios