நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் விஜய் ரசிகர்கள் வெள்ளி தேர் இழுத்து வழிபட்டனர்.

நடிகர் விஜய் 49வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் அவர்கள் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் ஆர்.கே.ராஜா தலைமையிலான அமைப்பினர் திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திரா கோவிலில் நடிகர் விஜய்யின் பெயரில் அர்ச்சனை செய்து வெள்ளி தேர் இழுத்தனர். 

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர். இந்நிகழ்வில் விஜய் ரசிகர்கள் நசீர், பாரதிராஜா, சுரேஷ்குமார், ஜீவா, சரண்ராஜ், அஸ்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர். நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி திருச்சி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

Scroll to load tweet…