கமலுக்கு வினோத் சொன்ன அரசியல் கதை.. அதன் பிறகு ட்ராப்பான KH233.. கையில் எடுப்பாரா தளபதி? தீயாய் பரவும் தகவல்!
Thalapathy 69 H Vinoth : தளபதி விஜய் தனது 69வது பட பணிகளை முடித்த பிறகு திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழு நேர அரசியலில் ஈடுபாவுள்ளார்.
தளபதி விஜய் நேற்று பிப்ரவரி 2ம் தேதி தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்றும், எந்த அரசியல் கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என்பதையும் தெளிவாக அவர் கூறியுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய் அவர்கள் அரசியல் களம் காண்பார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு திரைப்பட பணிகளை முடித்துவிட்டு அரசியலில் முழு நேரம் ஈடுபட உள்ளதாகவும், திரைத்துறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாகவும் தளபதி விஜய் அவர்கள் கூறியிருக்கிறார். இந்நிலையில் அவருடைய இறுதி திரைப்படமான தளபதி 69 திரைப்படத்தை இயக்கப் போவது யார் என்கின்ற கேள்விகள் எழுந்துள்ளது.
படம் சரியா போகல.. நஷ்டத்தை ஈடுகட்ட பாதி சம்பளத்தை திருப்பி கொடுத்த விஜய்.. எந்த படம் தெரியுமா?
இந்த திரைப்படத்தை RRR படத்தை தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பு தயாரிப்பாளரான DVV தனய்யா தயாரிக்க உள்ள நிலையில் பிரபல இயக்குனர் வினோத் அண்மையில் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு கதையை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் அவர் தான் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில், ஒரு அரசியல் களம் சார்ந்த கதையை கமல் அவர்களுக்கு கூறியிருந்தார் வினோத். KH233 என்ற அந்த படம் அண்மையில் ட்ராப் ஆனதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே அந்த கதையை தளபதி விஜய் அவர்களுக்கு கூறி அதில் அவர் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் அண்மையில் "Hungry Cheetah" என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.