'விக்ரம்' பட பாணியில்... 'தளபதி 67'..! படப்பிடிப்புக்கு முன்னர் புது பிளான் போட்ட லோகேஷ் கனகராஜ்..!
'விக்ரம்' பட பாணியில் டீசர் வெளியிட்டு 'தளபதி 67' படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் துவங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், 'விக்ரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின்னர்... 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யின் 67 வது படத்தை இயக்க உள்ளார். கேங்ஸ்டார் கதையம்சம் கொண்ட இந்த படத்தில், விஜய்க்கு வில்லனாக நடிக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி விஷால் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து ஏற்கனவே வெளியான தகவலின் படி... நவம்பர் கடைசி வாரத்திலோ அல்லது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலோ துவங்கும் என கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி 'தளபதி 67' படத்தின் பூஜை போடப்பட உள்ளதாக சமூக வலைத்தளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. இதில் விஜய் மற்றும் படகுழுவைச் சேர்ந்த பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும் டிசம்பர் 7 தேதி முதல் 9ஆம் தேதி வரை, விஜய் 'தளபதி 67' படத்தின் ப்ரோமோ ஷூட்டில் கலந்துகொள்ள உள்ளதாகவும், இதன் பின்னர் கிறிஸ்மஸ் பண்டிகை முடிந்த பின்னர் சுமார் 15 நாட்கள் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும், கூறப்படுகிறது. பின்னர் சமார் 50 நாட்கள் காஷ்மீர் பகுதியில் படப்பிடிப்பை நடத்த லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
பாரதிக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி? DNA ரிசல்ட்டை தொடர்ந்து தெரியவரும் இரண்டு உண்மைகள்!
தளபதி 67 படம் குறித்த அப்டேட்டுக்காக காத்திருந்த அவருடைய ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாம்சத்துடன் உருவாகுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னர், விக்ரம் பட பாணியிலேயே டீசர் வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ள நிலையில், படத்தின் தலைப்பையும் டீஸரிலேயே அறிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- lokesh kanagaraj about thalapathy 67
- thalapathy 67
- thalapathy 67 announcement
- thalapathy 67 gangster movie
- thalapathy 67 latest update
- thalapathy 67 latest updates
- thalapathy 67 lcu
- thalapathy 67 lokesh kanagaraj
- thalapathy 67 malayalam
- thalapathy 67 movie
- thalapathy 67 movie update malayalam
- thalapathy 67 music director
- thalapathy 67 official announcement
- thalapathy 67 rolex suriya
- thalapathy 67 story
- thalapathy 67 title
- thalapathy 67 trailer
- thalapathy 67 update
- thalapathy 67 update malayalam
- thalapathy 67 update tamil
- thalapathy 67 update today
- thalapathy 67 updates
- thalapathy 67 vikram part 2
- thalapathy 67 villain
- thalapathy 67 vs vikram
- thalapathy vijay
- vikram
- vikram x thalapathy 67