பாரதிக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த அதிர்ச்சி? DNA ரிசல்ட்டை தொடர்ந்து தெரியவரும் இரண்டு உண்மைகள்!
'பாரதி கண்ணம்மா' சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், பாரதிக்கு விரைவில் இரண்டு உண்மைகள் தெரிய வர உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த சீரியலாக உள்ளது 'பாரதி கண்ணம்மா'. காதலித்து திருமணம் செய்து கொள்ளும் கண்ணம்மா மீது சந்தேகப்பட்டு, அவரை விட்டு பிரிந்து வாழும் பாரதி ஒரு வழியாக யாருக்கும் தெரியாமல் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து கண்ணம்மா தவறானவள் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த முறை டி என் ஏ ரிப்போர்ட், கண்ணம்மாவுக்கு சாதகமாக வந்தால்... அவருடன் சேர்ந்து வாழ போவதாகவும், இல்லையென்றால் தூக்கு மாத்திரைகளை சாப்பிட்டு உயிரை விட்டு விடுவேன் என பாரதி மிகவும் மனம் நொந்து தனக்குத்தானே பேசிக் கொள்ளும் புரோமோக்கள் வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில், டிஎன்ஏ ரிப்போட்டம் கண்ணம்மாவுக்கு சாதகமாக வருவது உறுதியாகியுள்ளது.
எனவே கண்ணம்மாவின் காலில் விழுந்தாவது அவரிடம் மன்னிப்பு கேட்டு, தன்னுடைய மகள்களான லட்சுமி மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து வாழ துடிக்கும் பாரதி, டெல்லியில் இருந்து கண்ணம்மாவை சந்திக்க செல்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு பிரபலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில்... வெண்பாவுக்கு எதிராக செயல்பட்டு சீரியலை மிகவும் விறுவிறுப்பாக்கிய துர்கா ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகி வரும் போது எதிர்பாராமல் பாரதியை சந்திக்கும் துர்கா, உங்களிடம் பல வருடங்களாக ஒரு உண்மையை கூற வேண்டும் என முயற்சி செய்து வருவதாக கூறி, பாரதியின் முன்னாள் காதலியான ஹேமாவை கொன்றது மற்றும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்தது என அனைத்தையும் செய்தது வெண்பா தான் என கூறுகிறார்.
உங்களை காதலித்து வந்த அவர், உங்களை அடைய வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்தார் என உண்மையை கூற, கூடவே இருந்து வெண்பா செய்த துரோகத்தை கேட்டு பாரதி அதிர்ச்சியடைவது போல் அடுத்து வர எபிசோடுகள் நகரும் என ஒரு தகவல் வைரலாகி வருகிறது. எனினும் பாரதி மனம் திருந்தி வந்தாலும் கண்ணம்மா இனி ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.