"பிகில்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து "கைதி" பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில், விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கெனவே, முதற்கட்டமாக சென்னையிலும், அடுத்த கட்டமாக டெல்லியிலும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. தொடர்ந்து, 3-வது கட்டமாக மீண்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தி முடித்த படக்குழு,  4-வது கட்ட ஷூட்டிங்கிற்காக கர்நாடகாவில் முகாமிட்டது. 

விஜய், விஜய் சேதுபதி இடையிலான சண்டை காட்சிகளை படம்பிடிப்பதற்காக சிவமோகாவில் பிரம்மாண்ட சிறைச்சாலை செட் அமைக்கப்பட்டதாகவும், ஸ்டேண்ட் சில்வா சண்டை காட்சிகளுக்கு பயிற்சி அளிப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே கர்நாடகாவில் தங்கியுள்ள விஜய்யைக்கு தமிழக ரசிகர்களை விட அதிகமாகவே கர்நாடக ரசிகர்கள் பாச மழை பொழிந்தனர். 

தற்போது கர்நாடகாவில் விஜய் பற்றிய காட்சிகள் ஷூட் செய்யப்பட்டு விட்டதாகவும், இன்று விஜய் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் - விஜய் சேதுபதி இடையேயான பைட் சீன் ஓவரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.