விஜய்யுடன் கூட்டணி சேரும் ‘96’ பிரபலம்... ‘தளபதி 64’ படத்தின் புது அப்டேட்...!

தீபாவளி டிரீட்டாக திரைக்கு வந்த  ‘பிகில்’ திரைப்படம் வசூலில் வெறித்தனம் காட்டி வருகிறது. நயன்தாரா, டேனியல் பாலாஜி, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். அட்லீ இயக்கத்தில் உருவான  ‘பிகில்’ படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் விஜய் மரண மாஸ் காட்டியிருந்தார். இதனையடுத்து தற்போது ‘தளபதி 64’ படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  XB கிரியேட்டர்ஸ் தயாரிக்கும் அந்த படத்தை, மாநகரம், கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 

‘பிகில்’ திரைப்படத்தை போன்றே ‘தளபதி 64’ படத்தில் நடிப்பவர்கள் குறித்த அதிரடி அறிவிப்புகள் நாள்தோறும் வெளியிடப்படுகின்றன. இதுவரை விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு,  ‘அங்கமாலி டைரீஸ்’ ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பூஜையுடன் ஆரம்பித்த ‘தளபதி 64’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு,  22 நாட்களுக்குப் பிறகு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்க உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தளபதி 64’ படத்தின்  அப்டேட் குறித்து தினமும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்த படக்குழுவினர், இன்று தடாலடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியான ‘96’படத்தில் நடிச்ச, சின்ன வயசு ஜானுவ யாரும் மறந்திருக்க முடியாது.  அந்த கெளரி கிருஷ்ணன் தான் ‘தளபதி 64’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மனம் கவர்ந்த குட்டி ஜானுவை மீண்டும் திரையில் பார்க்கப்போறோங்கிற சந்தோஷத்தை ரசிகர்கள் இப்பவே சமூக வலைத்தளங்களில் பரப்ப ஆரம்பிச்சிட்டாங்க.