பிகில் படத்திற்கு பிறகு கைதி பட புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். அந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்திற்கு தற்காலிகமாக "தளபதி 64" எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார்.சென்னையில் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வந்தது. 

அங்கு தினேஷ் மாஸ்டர் நடன வடிவமைப்பில் 150 கலைஞர்களுடன் விஜய் ஆடும் மாஸ் ஓப்பனிங் சாங் படமாக்கப்பட்டது. மேலும் ஹீரோயின் மாளவிகா மோகன் உடனான காட்சிகளும், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படும் நிலையில், டெல்லியில் உள்ள முக்கிய கல்லூரிகளில் ஷூட்டிங் நடைபெற்றது. தற்போது 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த டெல்லி ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

 

2020ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதால் தீயாய் வேலை செய்த படக்குழுவினர், இப்போது சென்னை வந்தடைந்துள்ளனர். டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த போட்டோவை நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பகிர்ந்துள்ள சாந்தனு, ஆஃப் டூ சென்னை என பதிவிட்டுள்ளார். இதையடுத்து தளபதி 64 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.