அப்பா, மகன் என இரு தோற்றங்களில் காட்சியளிக்கும் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் சில மணித்துளிகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. ஃபர்ஸ்ட் இரு தோற்றங்களையும் ஒரே டிசனில் வெளியிட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு  இன்று மாலை 6 மணிக்கு தளபதி 63’ படத்தின் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையிலும் ஆர்வக்கோளாறின் உச்சத்தில் இதுதான் படத்தின் தலைப்பு என்று சுமார் 10 டம்மி டைட்டில்கள் வரை  நேற்றுமுதல் வலைதளங்களில் நடமாடிவந்தன.

தளபதி 63’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லி இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில்சற்றுமுன் ) மாலை 6 மணிக்கு ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் அப்பா விஜய் ஒரு கசாப்புக் கடை மரக்கட்டைக்கு முன் அமர்ந்திருக்க, மகன் விஜய் ஒரு கால்பந்தை சுழற்றிப் பிடித்தபடி நிற்கிறார். பின்னணியில் ஒரு மார்க்கெட் செட் இருக்கிறது. இந்த டிசைனை தற்போது விஜய் ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.