இயக்குனர் ஏ.எல்.விஜய் தற்போது, மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக உருவாகி வரும் 'தலைவி' படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை 'கங்கனா ரணாவத்' நடிக்கிறார். ஏற்கனவே கங்கனா ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அடுத்து, தமிழ் பட வாய்ப்புகளை தொடந்து நிராகரித்து வந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின் 'தலைவி' படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இப்படத்திற்காக ஜெயலலிதா போல் நடிக்க பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் கங்கனா.

எம்.ஜி.ஆர்.வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கிறார். ஏற்கனவே இதுகுறித்த டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது 'தலைவி' படத்தில் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் ஒன்றான சோபன் பாபு கதாப்பாத்திரத்தில், பிரபல பெங்காலி நடிகர் ஜிஸ்ஸு செங்குப்தா என்பவர் கமிட் நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, என மூன்று மொழிகளில் உருவாகி வரும் 'தலைவி' திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.