இமயமலை பயணம் ஓவர்.. அடுத்து "தலைவர் 170" ஷூட்டிங் தான்.. அமிதாப்பச்சன் தான் வில்லனா? ருசிகர அப்டேட்!
ஜெயிலர் திரைப்பட வெற்றியை தொடர்ந்து, சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை சென்று திரும்பி உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இதனை அடுத்து அவர் தனது அடுத்த பட படபிடிப்பில் விரைவில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் "அண்ணாத்த" திரைப்படம் வெளியான நிலையில், அவருடைய 169 திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்ற தகவல்கள் வெளியானது, மேலும் மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது.
இந்த சூழலில் படம் வெளியாகி சுமார் 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலக அளவில் பல கோடி ரூபாய்களை தொடர்ச்சியாக குவித்து, பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது ஜெயிலர் திரைப்படம். இந்நிலையில் இந்த பட ரிலீசுக்கு முன்பாக சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது இமயமலை பயணத்தை தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இமயமலையின் பல பகுதிகளில் தியானம் மேற்கொண்டு நேற்று அவர் சென்னை திரும்பினார். இந்நிலையில் அடுத்தபடியாக ஜெய் பீம் பட புகழ் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ரஜினிகாந்த நடிக்கவுள்ளார். தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் இரண்டாம் வார வாக்கில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் முக்கியமான பல நடிகர்கள் இணையுள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் அமிதாப்பச்சன், சூப்பர் ஸ்டார் அவர்களுடன் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் மெயின் வில்லனாக அமிதாப்பச்சன் தான் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் உலகின் முன்னணி நடிகரான அமிதாபச்சன், பெரிய அளவில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்ததில்லை.
ஆகவே இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன் அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் என்று வெளியாகியுள்ள தகவல் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகும் என்றும், ஜெயிலர் திரைப்படத்தை போல இந்த திரைப்படத்திலும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதாபாத்திரத்தை ஏற்று சூப்பர் ஸ்டார் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி! கப்பு சிப்புனு கட் செய்த இசைப்புயல்!