சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'தர்பார்' திரைப்படம் வரும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அரசியலில் ரஜினிகாந்த், ஈடுபடுவார் என பார்த்தால் அடுத்த படத்திற்கு தயாராகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில், கடந்த ஓரிரு தினங்களாகவே இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளை பற்றிய அப்டேட் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில் நேற்றைய தினம், இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு, பின் அவருக்கே ஜோடியாக நடித்து பல பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை மீனா இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து, அண்ணாமலை, பாண்டியன், மன்னன் உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் நடித்த நடிகை குஷ்புவும் இணைந்து நடிக்க உள்ளது உறுதிசெய்யப்பது.

இவர்களை தவிர நடிகை கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கான அனைத்து முன் ஏற்பாடு பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் பூஜை இன்று பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இதில், தலைவர் ரஜினிகாந்த், நடிகை மீனா, குஷ்பு, இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த படத்தை தயாரிக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனம், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.