செம்ம ஸ்டைலிஷ் கெட்டப்பில்... வேற லெவலில் விஜய்..! 'தளபதி 65 ' புதிய வீடியோ வெளிட்ட சன் பிச்சர்ஸ்!
விஜய் ரசிகர்கள் தளபதியின் 65வது படம் குறித்த தகவலுக்காக எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் காலை முதலே சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஜய் ரசிகர்கள் தளபதியின் 65வது படம் குறித்த தகவலுக்காக எதிர்பார்த்து கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இது குறித்த புகைப்படங்கள் காலை முதலே சோஷியல் மீடியாவில் வைரலாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக, இந்த வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி தளபதி பொங்கலாக கலக்கியது. 50 சதவீத பார்வையாளர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும், இரண்டே நாளில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். சுமார் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனையையும் படைத்தது.
தளபதியின் இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக விஜய் டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியான நிலையில், சமீபத்தில் ரஷ்யா சென்று சூட்டிங் லொகேஷன் பார்த்த புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு இயக்குனர் தளபதி 65 படத்தின் அப்டேட் கொடுத்தார். மேலும் இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், 'தளபதி 65 ' படத்தில் நடிக்க உள்ள நாயகி குறித்த தகவலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சன் டிவி அலுவலகத்தில் மிக பிரமாண்டமாக 'தளபதி 65 ' படத்தின் பூஜை இன்று காலை நடந்து முடிந்தது. இதில் தளபதி விஜய், நடிகை பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், இயக்குனர் நெல்சன், உள்ளிட்ட படக்குழுவை சேர்த்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக தளபதி செம்ம ஸ்டைலிஷாக பூஜையில் கலந்து கொண்டார்.
'தளபதி 65 ' படத்தின் பூஜை குறித்த புகைப்படங்களை மட்டுமே வெளியிட்ட சன் பிச்சர்ஸ் நிறுவனம் தற்போது, வீடியோவை வெளியிட்டுள்ளது. சற்று முன் வெளியான இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வீடியோ இதோ...