தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 64 ஆவது படம் குறித்த அணைத்து தகவல்களையும் ரகசியமாகவே வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே, படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் படக்குழுவினரிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதற்கான விடை கிடைத்துள்ளது.

அதாவது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், வரும் டிசம்பர் 31 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தளபதி படத்தின் இந்த தகவல் வெளியானதுமே, ரசிகர்கள் இந்த தகவலை வெறித்தனமாக, சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, அதிரடி வில்லனாக நடிக்கிறார். 

மேலும் இந்த படத்தில், சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன், தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை விஜயின் உறவினர் ஜான் பிரிட்டோ மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். அனிரூத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது வெளியான அந்த மாஸ் தகவல் இதோ...