அமராவதியில் அறிமுகமான அஜித் தற்போது வலிமை வரையிலும் எண்ணிலடங்கா சாதனைகளை செய்து வருகிறார். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என ஒரு சோசியல் மீடியாவில் அக்கவுண்ட் இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளங்களை ஆட்டம் காண வைப்பதில் தல அஜித்திற்கு நிகர் அவர் மட்டுமே. அஜித் பற்றி ஒரு சின்ன தகவல் கிடைத்தாலும் சரி, தல ரசிகர்கள் தனி ஹேஷ்டேக் கிரியேட் செய்து அதை உலக அளவிற்கு ட்ரெண்ட் செய்துவிடுகின்றனர்.

இதையும் படிங்க: க்யூட் பேபி டூ “பிக்பாஸ்” செலிபிரிட்டி வரை... நடிகை ஓவியா பொக்கிஷமாக பொத்தி வைத்த அரிய புகைப்பட தொகுப்பு...!

நாளை அஜித்திற்கு பிறந்த நாள் வர உள்ள நிலையில், கடந்த வாரம் முதலே  விதவிதமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். பெரும் ரசிகர் படையை வைத்திருக்கும் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் கணக்கே இல்லாமல் சமூக வலைதள ட்ரென்டிங்கில் டாப் இடம் பிடித்து சாதனை படைத்து வருகிறார் அஜித்.

இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

இதற்கு முன்னதாக ட்விட்டரில் வெளியான தல அஜித்தின் காமென் டி.பி. ஒரே நாளில் 5 மில்லியன் ஷேர்களை கடந்து உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது நல்ல அறிவிப்பு வெளியாகும் என அவரது ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருந்தனர். ஆனால் தற்போது வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கை அஜித் ரசிகர்கள் இதயத்தில் ஈட்டியை பாய்ச்சிவிட்டது. 

இதையும் படிங்க:  பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

அந்த அறிக்கையில், "கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரைக் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதுவரை தனித்திருப்போம், நம் நலம் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றில் உள்ளனர்.