நிச்சயமா ஹிட்டடிப்போம்னு தெரியும் ஆனா இப்படி தாறுமாறா ஹிட்டாவோம்னு நானே நினைக்கல! பயமா இருக்குது!’ சத்யஜோதி டீமிடம் உணர்ச்சி பொங்க பகிர்ந்திருக்கிறார் தல. கோடம்பாக்கத்தின் மாஸ் ஹீரோக்கள் இப்போது  பயப்பட துவங்கியுள்ளது அஜித்தின் இந்த ‘பயத்தை’ பார்த்துத்தான். குழப்புதா? தொடர்ந்து வாசியுங்கள்...

கடந்த 10-ம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ஓப்பனிங்கிலும், பாக்ஸ் ஆபீஸிலும் தெறிக்க விட்டிருக்கிறது. பாகுபலிக்கு இணையான  ஓப்பனிங் வரவேற்பும், ஹிட் புகழையும் தொட்டிருக்கிறது. இந்தப் படத்தோடு திட்டமிட்டு ரிலீஸாகி போட்டி போட்ட ரஜினியின் பேட்ட படத்துக்கும் இதற்கு இணையான வரவேற்பும், பாஸிடீவ் ரிசல்ட்டும் கிடைத்துள்ளது. ஆனாலும், ஒவ்வொரு விஷயத்திலும் இந்த படத்தை பொறுத்தவரையில் ரஜினியைவிட சில படிகள்  முன் ஏறியே நிற்கிறார் அஜித்குமார். 

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் தயாரிப்பு தரப்பான சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிர்வாக தரப்பு மரியாதை சந்தோஷம், நன்றி கலந்து அஜித்திடம் பேசியபோது அப்போது விவேகத்தில் சந்தித்த சரிவை இந்தப் படத்தின் மூலம் அநியாய வட்டியும் முதலுமாக  திருப்பித் தந்து தங்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துவிட்டதாக புகழ்ந்திருக்கிறார்கள். இதற்கு தல வழக்கம்போல் பாதம் பார்த்து பதில் நன்றி சொல்லி, ‘மறுபடியும் என்னை நம்பி வாய்ப்பு தந்தது பெரிய விஷயம்!’ என்று அடக்கம் காட்டி நெகிழ வைத்திருக்கிறார். 

பின் விஸ்வாசம் பற்றி வாய் திறந்த தல ‘படத்தை வெறியோடதான் நானும் சிவா சாரும் உருவாக்குனோம். முடிச்சுட்டு பார்த்தப்ப நிச்சய வெற்றி நம்பிக்கை வந்துச்சு. ஆனால், இப்படி தாறுமாறா மக்கள் கொண்டாடி ஹிட் கொடுப்பாங்கன்னு நானே நினைக்கலை. இந்த வெற்றியை பார்த்து சந்தோஷத்தை விட எனக்கு பயம்தான் அதிகமாகி இருக்குது. என்னோட அடுத்த படத்தையும் இப்படி ஹெவி சக்ஸஸா எதிர்பார்ப்பாங்க என் ரசிகர்களும், மக்களும்! அதை நிறைவேற்றியே ஆகணும்ங்கிற பயம் வந்திருக்குது. ஆனாலும் இந்த சவால் எனக்கு பிடிச்சிருக்குது.” என்றாராம். 

வாழ்த்தியதாம் சத்யஜோதி தரப்பு. இந்நிலையில் விஸ்வாசம் தயாரிப்பு டீம் நிர்வாகத்திடம் அஜித் சொன்ன ‘அடுத்த படத்தையும் பெரிய ஹிட்டா கொடுக்க வேண்டிய பயம் கலந்த சவால்!’ எனும் தகவல் கோடம்பாக்கத்தில் வைரலாகி இருக்கிறது. இதில் விஜய், விஜய்சேதுபதி, தனுஷ், சிவகார்த்தி உள்ளிட்ட பல ஹீரோக்கள் தெறித்து திக் திக்காகி உள்ளனர். காரணம், ’ச்சும்மாவே ஓப்பனிங்ல அஜித்தை நெருங்க முடியாது. இதுல விஸ்வாசம் பிய்ச்சுக்கிட்டு போயிடுச்சு. இனி இதை மனசுல வெச்சே மனுஷன் தன்னோட ஒவ்வொரு படத்தையும் செதுக்கி செதுக்கி செய்ய துவங்குனா நம்ம மார்க்கெட் என்னாகும்? ஆனானப்பட்ட ரஜினியையே தெறிக்கவிட்டிருக்காரே!’ என்று அலறியிருக்கின்றனர். தல ரசிகப்புள்ளைங்களே...இனி வருஷா வருஷம் ஸ்வீட் சாப்பிடுங்க.