100 மில்லியன் கிளப்பில் இணைந்த ‘அடிச்சி தூக்கு’ பாடல்... கொண்டாட்டத்தில் தல ஃபேன்ஸ்...!
கண்ணான கண்ணே, அடிச்சித் தூக்கு ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.
தல ரசிகர்களின் பேவரைட் இயக்குநரான சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ‘வேதாளம்’, ‘வீரம்’,‘விவேகம்’ ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு நான்காவது முறையாக இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். 2019ம் ஆண்டு பொங்கல் பரிசாக வெளியான இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாக நடித்திருந்த இந்த படத்தில் தம்பிராமையா, விவேக், யோகிபாபு, கோவை சரளா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சென்டிமெண்ட் கதைக்களத்தில் புகுந்து விளையாடும் சிறுத்தை சிவா, இந்த படத்தில் மனைவியை பிரிந்து வாழும் கணவன் மற்றும் மகள் பாசத்திற்காக ஏங்கும் அப்பா என அஜித்தை வேற லெவலுக்கு காட்டியிருந்தார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் தல அஜித்திற்கு மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட்டாக அமைந்தது. டி இமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக கண்ணான கண்ணே, அடிச்சித் தூக்கு ஆகிய இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ‘கண்ணான கண்ணே’ பாடல் யூடியூப்பில் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், ‘அடிச்சித் தூக்கு’ பாடலும் தற்போது அதே சானையை பெற்றுள்ளது. அடிச்சித்தூக்கு பாடல் 100 மில்லியன் கிளப்பில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.