Thala Ajith : பல ஆண்டுகள் கழித்து தல அஜித் நடிப்பில், ஒரே நேரத்தில் இரு படங்கள் உருவாகி வருகின்றது. இரு படங்களும் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது தல அஜித் அவர்கள் நடித்து வரும் திரைப்படம் தான் "குட் பேட் அக்லி". இந்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானபோதே, எதிர்வரும் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்போடு வெளியானது, அஜித் அவர்களுடைய ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. 

அதேபோல ரவிச்சந்திரன் அவர்களும் விறுவிறுப்பாக படபிடிப்பு பணிகளை துவங்கினார். ஏறத்தாழ 30 முதல் 40 சதவீத படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்களும் தொடர்ச்சியாக வெளியானது படத்தின் வேகத்தை எடுத்துரைத்தது. 

Meera Nandan: குருவாயூர் கோவிலில் காதலரை கரம்பிடித்து நடிகை மீரா நந்தன்..! வெளியான வெட்டிங் போட்டோஸ்..!

ஆனால், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு இன்னும் முழுமை பெறாமல் இருக்கும் அஜித்தின் "விடாமுயற்சி" திரைப்படம் குறித்த கவலை அஜித் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் அந்த கவலையையும் கடந்த சில வாரங்களாகவே தீர்த்துவைத்து வருகின்றார் அஜித் என்று தான் கூறவேண்டும். அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி பட பணிகள் மீண்டும் விறுவிறுஓயாக துவங்கியுள்ளது. 

அஜித் அவர்களின் PRO சுரேஷ் சந்திரா, அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் விடாமுயற்சி பட வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் நாளை ஜூன் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வரவுள்ளதாக சுரேஷ் சந்திரா இப்பொது கூறியுள்ளார். அது டீசராக கூட இருக்கலாம் என்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் அஜிதின் ரசிகர்கள்.

Scroll to load tweet…

தொடர்ச்சியாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி பட அப்டேட்கள் வெளியாகி வருவதால் உச்சகட்ட மகிழ்ச்சியில் தலயின் ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். அஜித் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து இப்படி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.

கல்கி 2898 ஏடி படத்தில் கிருஷ்ணராக நடித்தது இந்த தமிழ் நடிகரா? அட.. சூர்யாவின் நண்பர் ஆச்சே..