அஜித் - ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் வெளிவந்த "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. அஜித்தின் பெண் ரசிகைகளை மிகவும் கவர்ந்த அந்த படம், தலயின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக மாறியுள்ளது. இதையடுத்து அதே வெற்றி கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ள படம் "வலிமை". ஹெச்.வினோத் இயக்க உள்ள அந்தப் படத்தை, பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இயக்க உள்ளார். அஜித்தின் 60வது படம் என்பதால், தல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் அக்டோபர் 19ம் தேதி சத்தமே இல்லாமல் படத்திற்கான பூஜை போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தா போவாங்க, அந்தா போவாங்க என்று எதிர்பாத்து காத்திருந்த வலிமை படத்தின் ஷூட்டிங் தேதி தற்போது வெளியாகியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் போனிகபூர், "வலிமை" படத்தின் ஷூட்டிங் வரும் 13ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இரண்டு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, தல ரசிகர்களை தலைகால் புரியாத அளவிற்கு கொண்டாட வைத்துள்ளார். 

அப்படி என்ன அறிவிப்புன்னு கேட்குறீங்களா?. விரைவில் ஆரம்பிக்கும் என்று அதிரடியாக எதிர்பார்க்கப்பட்ட ஷூட்டிங் தள்ளிப்போனதால், இந்த வருடம் நமக்கு தல பொங்கலா, தல தீபாவளியான்னு தெரியாமல் அஜித் ரசிகர்கள் குழம்பிப் போய் இருந்தனர். இந்நிலையில் "வலிமை" திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்றும், படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாகவும் போனிகபூர் அறிவித்துள்ளார். "வலிமை" படம் குறித்து ஏதாவது அப்டேட் கிடைக்காதா என காத்திருந்த தல ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் 3 அதிரடி தகவல்களை கொடுத்து, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் போனிகபூர்.