செம்ம உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள் #Thaladiwali என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவிற்கு ட்ரெண்ட் செய்து வந்தனர். 

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து போனிகபூர் - ஹெச்.வினோத் - அஜித் ஒன்றிணைந்துள்ள வலிமை திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். 


இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் வலிமை படக்குழு ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ​ இதையடுத்து நேற்று செம்ம உற்சாகத்தில் இருந்த தல ரசிகர்கள் #Thaladiwali என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவிற்கு ட்ரெண்ட் செய்து வந்தனர். 

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி வலிமை படக்குழு தீபாவளிக்கு முன்னதாகவே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா நேரத்தில் இரண்டு பெரியபடங்களை வெளியிட்டால் தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்பதால், வலிமை படக்குழு விநாயகர் சதுர்த்திக்கே படத்தை வெளியிடலாமா? என ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்களாம். இதனால் தல தீபாவளி கொண்டாட காத்திருந்த அதிர்ச்சியில் உள்ளனர்.