நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் மீண்டும் தல அஜித் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜித்குமார், கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு செம்ம எங் லுக்கிற்கு மாறியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, இலியானா, யாமி கவுதம் என அஜித்திற்கு ஹீரோயினாக நடிக்க உள்ளது இவர் தான் என மிகப்பெரிய லிஸ்டே சோசியல் மீடியாவில் சுற்றி வருகிறது.

ஆனால் படக்குழுவோ கதை, கதாநாயகி உள்ளிட்ட முக்கிய விஷயங்களை ரகசியமாக பாதுகாத்து வருகிறது. ஆனாலும் எப்படியோ ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடக்கும் முக்கியமான விஷயங்கள் போட்டோவாகவும், வீடியோவாகவும் வெளியாகி தல ஃபேன்ஸை குஷியாக்கிவிடுகிறது. 

அஜித்தின் வலிமை குறித்து கசிந்துள்ள தற்போதைய தகவல் தல ஃபேன்ஸை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 3 வில்லன்களாம். அதில் தெலுங்கு ஹீரோ கார்த்திகேயாவை வில்லனாக தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இன்னும் 2 வில்லன் நடிகர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். விரைவில் அவர்கள் யார் என்ற அதிகாரப்பூர்வ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.