ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தில் தல அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 3ம் கட்ட படப்பிடிப்பு சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: "பார்த்து ஜாக்கிரதையா இருங்க".... திரெளபதி படத்தை விமர்சித்த இயக்குநரை மிரட்டிய மோகன் ஜி...!

படத்தில் தல அஜித்தின் எங் லுக் கெட்டப் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி தாறுமாறு வைரலானது. அதைத் தவிர படத்தின் கதை என்ன, ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் யார் நடிக்க போகிறார் போன்ற தகவல்களை படக்குழு பரம ரகசியமாக வைத்துள்ளது. 

இருந்தாலும் சோசியல் மீடியாவில் படத்தின் ஷூட்டிங் காட்சிகள் அவ்வப்போது கசிந்த வண்ணம் உள்ளன. இதனால் ஓவர் அலர்ட் ஆன படக்குழு ஷூட்டிங் ஸ்பார்ட்டில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்தும் எதுவும் ஒர்க்அவுட் ஆனதாக தெரியவில்லை. 

இந்நிலையில் மீஞ்சுர் பகுதியில் நடைபெற்ற வலிமை படத்தின் பைக் ஸ்டேண்ட் காட்சிகள் சோசிய மீடியாவில் லீக்காகி வைரலாகி வருகிறது. மீஞ்சூர் ரிங் ரோடு பகுதியில் சாரை சாரையாக பறக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் திரில்லர் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!

மற்றொரு வீடியாவில் இந்த விறுவிறுப்பான சண்டை காட்சிகளை படமாக்குவதற்காக இயக்குநர் வினோத் கேமராவை செட் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரிகிறது. ஷூட்டிங் பார்க்க சென்ற நெட்டிசன்கள் இந்த காட்சிகளை தங்களது செல்போன்களில் எடுத்து சோசியல் மீடியாவில் உலவவிட்டுள்ளனர். இந்த செய்தி தெரிந்தால் படக்குழு அப்செட் ஆகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.