"நேர்கொண்ட பார்வை"  படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "வலிமை". அந்த படத்தில் அதிரடி போலீஸாக நடிக்க உள்ளார் அஜித். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. எடுத்ததுமே தல அஜித்தை வைத்து அனல் பறக்கும் சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார் வினோத். 

சண்டைக்காட்சிகள் மிகவும் ரிஸ்காக உள்ளதால் டூப் போட்டு எடுத்துக்கலாம் தல என ஹெச்.வினோத் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சம்மதிக்காத அஜித் டூப் எல்லாம் வேண்டாம் என்னால் முடிந்த  வரை நானே நடிக்கிறேன் என்று கூறிவிட்டாராம். ஏற்கனவே இது போன்ற சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து முதுகில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு போனவர் அஜித். பல்வேறு விபத்துக்களில் இதுவரை அஜித்திற்கு இடுப்பு எலும்பு, முதுகுதண்டு, கால் ஆகிய இடங்களில் அடிபட்டு, ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது.

 

2017ம் ஆண்டு வெளியான "விவேகம்" படத்திற்காக அஜித் சில ரிஸ்க்கான ஷாட்களில் நடித்தார். அதனால் அவருக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இதுபோன்று அடுத்தடுத்து அஜித் எடுக்கும் ரிஸ்க்கால் தல ரசிகர்கள் பீதியில் உள்ளனர். ஏன்பா எத்தனை தடவபட்டாலும் தல மட்டும் கேட்கவே மாட்டாங்குறாரு என அவரது ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.