கடந்த ஆண்டு தல அஜித்திற்கு அட்டகாசமான ஆண்டாக அமைந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த “விஸ்வாசம்” திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு, இமான் அண்ணாச்சி, ரோபோ சங்கர், அனிகா உள்ளிடோர் நடித்திருந்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. “வேதாளம்”, “விவேகம்”, “வீரம்” படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஜோடி சேர்ந்த இயக்குநர் சிவா - அஜித் கூட்டணி வெற்றி கூட்டணி என்பதை நிரூபித்தது. 

அதையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் “நேர்கொண்ட பார்வை” நடித்தார். முற்றிலும் மாறுபட்ட வக்கீல் கெட்டப்பில், அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டியிருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானதைத் தொடர்ந்து, தற்போது இதே வெற்றிக்கூட்டணி “வலிமை” படத்தில் கைகோர்ந்துள்ளது.  

இதையும் படிங்க: அனுஷ்காவா, சிரஞ்சீவியின் தம்பி மகளா யாரை மணக்கப்போகிறார் பிரபாஸ்?... அவரே கூறிய அதிரடி பதில்...!

 

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. “வலிமை” படம் குறித்த அப்டேட்டை தெரிந்து கொள்வதற்காக தல ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், அஜித்தின் அடுத்த படம் குறித்த அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியான “பில்லா” திரைப்படம் அஜித்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய மிக முக்கியமான படங்களில் ஒன்று. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பில்லா” படத்தின் தலைப்பை இந்த படத்திற்கு பயன்படுத்தினர். இந்த படத்திற்காக செம்ம கிளாஸ் அண்ட் ஸ்டைலிஷ் லுக்கில் விஷ்ணு வர்தன் அஜித்தை வடிவமைத்திருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. கோலிவுட் கேங்ஸ்டர் படங்களில் மிக முக்கிய இடம் பிடித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மாபெரும் சாதனைகளை படைத்தது. 

இதையும் படிங்க: கேரளா ஸ்டைல் வேட்டி, சட்டையில் அமலா பால்... கெத்து போஸைப் பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

அதையடுத்து இந்த படத்தில் நடித்த அஜித், நயன்தாரா, இயக்குநர் விஷ்ணு வர்தன் ஆகியோர் மீண்டும் “ஆரம்பம்” படத்தில் ஒன்றிணைந்தனர். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இந்நிலையில் அஜித்தை வைத்து மீண்டும் பில்லா போன்ற மாஸ் படத்தை விஷ்ணு வர்தன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அஜித்தின் தல 61 படத்தை விஷ்ணு வர்தன் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியில் ஒரு படம் இயக்கி வரும் விஷ்ணு வர்தன், அந்த படத்தை முடித்த  கையோடு அஜித் பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளாராம். நீண்ட நாளாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மெகாஹிட் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.