*    சென்னைப் பொண்ணான சமந்தா, திடீரென கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரிய நடிகையானார். அதன் பின் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை லவ்வி திருமணம் செய்தார். இதன் பின்னும் படங்களில் நடித்து வருகிறார். இப்போது இவருக்கும் கணவனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு என்று சொல்லப்படும் நிலையில், திடீரென சொந்தப் படம் தயாரிக்க கிளம்பிவிட்டார் சமந்து. ‘கேம் ஓவர்’ இயக்குநர் அஸ்வின் சரவணன் தான் இயக்குநராம். 
(சமந்து, சமர்த்து)
*    டோலிவுட்டின் தாறுமாறு ஹிட்டான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை சீயான் மகன் துருவ்வை வைத்து இருமுறை ரீமேக் செய்தனர். படம் பணால் ஆகிவிட்டது. ஆனால் துருவ்வின் நடிப்பு அவருக்கு இந்த துறையில் பெரிய விசிட்டிங் கார்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில் அப்படத்தில் சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் துருவ். அம்புட்டும் கெட்ட வார்த்தை காட்சிகளாம். 
(ச்ச்ச்ச்ச்சீ...........யான் மகன் பண்ற வேலையா இது?)

*    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் அடுத்து ஷங்கர் இயக்கத்திலா, வெற்றிமாறன் இயக்கத்திலா, மோகன் ராஜா இயக்கத்திலா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மனிதர் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸிடமே கைகோர்க்கிறாராம். விஜய் இப்படி அட்லீ மற்றும் ஏ.ஆர்.எம். இருவருக்கும் இடையில் மாற்றி ஓடுவது தளபதியின் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லையாம். 
(இந்த வாட்டியாச்சும் கதை திருட்டு பஞ்சாயத்தில் சிக்காத படமா இருக்கட்டும்.)

*    போனிகபூர் தயாரிப்பு, ஹெச்.விநோத் இயக்கம் என்று அதே ’நேர்கொண்ட பார்வை’ காம்போவுடன் மீண்டும் வலிமை படத்தில் இறங்கியிருக்கிறார் தல அஜித். இப்படத்தின் முதல் ஷெட்யூலை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பக்காவாக முடித்துவிட்டனர். செம்ம ஆக்‌ஷன் பிளாக் ஷூட்டாகி முடிந்துவிட்டதாம். 
(ஹீரோயின் யாருன்னு இப்பவாச்சும் சொல்லுங்கப்பா)

*    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி போய்க் கொண்டிருக்கிறது. இப்படத்துக்காக இமான் போட்டிருக்கும் செம்ம கலகலப்பான ஓப்பனிங் மாஸ் சாங், ரஜினியை மிகவும் கவர்ந்துடுச்சாம். மனிதர் இமானை அழைத்து வைத்து பாராட்டியிருக்கிறார். 
(ச்சும்மா அடி அடி!)