நடிகர் அஜித் சமூக வலைத்தளங்களில் இணைய உள்ளதாக நேற்று முதல் சோசியல் மீடியாவில் ஒரு அறிக்கை வலம் வந்து கொண்டிருந்தது. சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித், அடுத்து அதிக நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட ஆசைப்படுகிறார். அதனால் தான் தேவையில்லாமல் நேரத்தை விழுங்கும் சோசியல் மீடியாக்களை கண்டலே தலைக்கு அலர்ஜி. அந்த பக்கம் எட்டிக்கூட பார்ப்பது கிடையாது.

ஆனால் அஜித் பெயரில் திடீரென உதயமான முகநூல் கணக்கின் மூலம் அச்சு, அசலாக அவரது கையெழுத்து போலவே கையெழுத்திடப்பட்ட அறிக்கை ஒன்று தீயாய் பரவியது. அதில், மீண்டும் சமூக வலைத்தளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என் உத்தியோகபூர்வ முகப்புத்தகம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம். மேலும் இதை காரணமாக வைத்து சமூக வலைத்தளங்களில் எனது ரசிகர்கள் எந்தவிதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: "நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி...!

இந்த அறிக்கை குறித்து தல அஜித்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட, அவரது வழக்கறிஞர் எம்.எஸ். பரத் ஒரு நோட்டீசை வெளியிட்டுள்ளார். அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நோட்டீசில், மார்ச் 6ம் தேதி அஜித் குமார் வெளியிட்டதாக அறிக்கை ஒன்று சோசியல் மீடியாக்களில் பரவி வருகிறது. அந்த அறிக்கையில் அஜித்குமார் பெயருடன் போலியான தலைப்பில் அச்சிடப்பட்டு, போலி கையொழுத்தும் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

இதையும் படிங்க: கொடியில் பழம் பறிக்கும் கொடியிடையாள்... எக்கி நின்று இடுப்பை காட்டி இளசுகளை விக்க வைக்கும் மாளவிகா மோகனன்...!

அந்த கடிதம் அஜித்குமாரால் வெளியிடப்படவில்லை என்றும், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யாவும் அவருடையது இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவிக்கவே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். அஜித் குமார் ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா கணக்குகளும் இல்லை எனவும், சமூக ஊடகங்களில் எவ்வித ரசிகர்கள் பக்க கணக்கையும் தொடங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

அஜித்குமார் கீழ்க்கண்டவற்றை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறார்.

1. அவருக்கு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகள் எதுவும் இல்லை.
2. அவர் எந்தச் சமூக ஊடகங்களிலும் இணைய விரும்பவில்லை.
3. சமூக ஊடகங்களின் எந்தவொரு கருத்தையும் மற்றும் எந்தவொரு ரசிகர் பக்கத்தையும் குழுவையும் அவர் ஆதரிக்கவில்லை. 
4.மீண்டும் சமூக ஊடகங்களில் சேரப்போவதாகக்கூறி வந்த இந்தப் போலி கடிதத்தை அவர் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: தர்பாரையே தட்டித்தூக்கிய "திரெளபதி"... ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?

இறுதியாக, தவறான அறிவிப்பை வெளியிட்ட மற்றும் எங்கள் கட்சிக்காரரின் கையொழுத்தை மோசடி செய்த குற்றவாளியைக் கண்டுபிடித்தற்கு தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.