சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தற்போது அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய்க்கு  விஜய் சேதுபதி கொடுத்த அசத்தல் முத்தத்துடன் படப்பிடிப்பிற்கு ஹாப்பியாக எண்ட் கார்டு போட்டாச்சு. அடுத்து ஏப்ரல் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

டுவிட்டரில் ட்ரெண்டாகும் மாஸ்டர் அப்டேட்டுகளை எல்லாம் ஹீரோயின் மாளவிகா மோகனனே பின்னுத் தள்ளிவிடுகிறார். அதாவது அம்மணி வெளியிடும் ஹாட் போட்டோ ஷூட் கிளிக்ஸ் அப்படி. குறிப்பாக அந்த போட்டோக்களில் முன்னழகு, முதுகு தரிசனம் என சகலத்தையும் காட்டி இளசுகளை கிறங்கடித்துவிடுகிறார். 

என்ன தான் இருந்தாலும் விஜய் படத்து ஹீரோயின் இல்லையா?... அதனால் தளபதி ரசிகர்களும்  அந்த கவர்ச்சி புகைப்படங்களை தாறுமாறு வைரலாக்கி விடுகின்றனர். இதனால் மாளவிகா, படத்தில் நடிப்பதை விட போட்டோ ஷூட்டில் செம்ம பிசியாகிவிட்டார். அந்த புகைப்படங்கள் தான் மலையாள தேசத்து மங்கையான மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை குவிப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது மெரூன் கலர் பட்டுப்புடவையில் இடையழகு தெரிய மாளவிகா மோகனன் கொடுத்துள்ள ஹாட் போஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது. இந்த ஒரே போட்டோவில் இடையழகி ரம்யா பாண்டியனையே அம்மணி பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்றால் பார்த்துக்கோங்க. அப்படி ஒரு ஹாட் போஸ் கொடுத்து லைக்குகளை குவிச்சிட்டு இருக்காங்க. அந்த வைரல் புகைப்படங்கள் இதோ...