நாடக காதலை தோலுரிப்பதாக கூறிய கடந்த மாதம் 28ம் தேதி வெளியான திரைப்படம் திரெளபதி. பழைய வண்ணாரப்பேட்டை இயக்குநர் மோகன் ஜி இயக்கியுள்ள இந்த படத்தில் ஷாலினி அஜித்தின் தம்பி ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போதில் இருந்தே எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வந்தது. ஆனால் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன போது பேனர், பாலாபிஷேகம் என தடபுடலான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 

தமிழகத்தில் 330 தியேட்டர்களில் வெளியான படம் வசூலில் வேற லெவலில் மாஸ் காட்டி வருகிறது. நாடக காதல் குறித்து வெளிப்படையாக கருத்து கூறியதால் படம் சில சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிகிறது. அதனால் படத்தை குடும்பம், குடும்பமாக பார்க்க வரும் ரசிகர்களின் கூட்டம் சரளமாக அதிகரித்து வருகிறது. 

இதையும் படிங்க: "நான் எப்ப சிக்குவேன்னு பார்த்துக்கிட்டே இருக்கு"... விழா மேடையில் பிரபல பாடகியை கலாய்த்த ராதாரவி...!

இந்நிலையில் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆன நிலையில் வசூல் நிலவரம் குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். அந்த ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குநர் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாஸ் ட்வீட், ரசிகர்களை ஹாப்பியாக்கியுள்ளது. 

அதில், 300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது... இதுவரை 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது.. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சி திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.. என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

தமிழில் முதன் முறையாக கிரவுட் ஃபண்டிங் முறையில் 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட திரெளபதி திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத சாதனையை படைத்துள்ளது. சூப்பர் ஸ்டாரின் தர்பார் படம் கூட வசூல் ரீதியாக தோல்வி அடைந்ததாக கூறப்படும் நிலையில், சிறிய பட்ஜெட் படமான திரெளபதி வசூலில் தட்டித்தூக்கி சாதனை படைத்துள்ளது.