நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறியிருந்தார். அதை சீமான் மறுத்த நிலையில், அவரது முகத்திரையை கிழித்தே தீருவேன் என்ற முடிவொடு சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தினம் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். இதற்கு முன்னதாக சீமானின் 'ஏய் பொண்டாட்டி' வீடியோவும், விஜயலட்சுமி சீமானுக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!

சமீபத்தில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளிக்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க மறுத்தது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிக்கு ஆதரவாக பேசிய சீமானை தாறுமாறாக கிழித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் நிர்வாகியான ராஜீவ் காந்தி, ரஜினிக்கு ஒரு கலாச்சார பிரச்சனை, மொழி பிரச்சனை, பண்பாட்டு பிரச்சனை என்றால் முதலில் நாம் தமிழர் கட்சி தான் நிற்கும் என்று பேசியிருந்தார். இதை சுட்டிக்காட்டியுள்ள விஜயலட்சுமி, என்ன திடீர்ன்னு ரஜினிக்கு துணை நிற்போம்ன்னு சொல்லுறீங்க. இந்த நாளாக என்ன வரலாற்றை பேசிக்கொண்டிருந்தீர்கள். ரொம்ப கேவலமாக ரஜினிகாந்தை பேசிக்கொண்டிருந்த நீங்கள், திடீர் என மாற காரணம் என்ன...?. உங்க அண்ணன் சீமான் ரஜினிக்கிட்ட காசு வாங்கிட்டாரா? அப்படித்தானே யாராவது பேசுனா சொல்லுவீங்க என கிழி, கிழியென கிழித்துள்ளார். 

இதையும் படிங்க: மூவாயிரம் இருந்தால் போதுமா?... படுகவர்ச்சியாக போட்டோ போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட யாஷிகா...!

பிரச்சனை என்று வந்தால் சீமான் கட்சி தம்பிகள் அடங்கிவிடுவதாகவும், அதனால் தான் காங்கிரஸ் கட்சியினரிடம் கூட மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். திடீர்ன்னு என்ன உங்களுக்கு ரஜினி சார் மேல அன்பு. மாத்தி, மாத்தி குலுக்கல் முறையில் பேசிக்கிட்டு இருங்கீங்களா?. எங்களை எல்லாம் முட்டாள்ன்னு நினைக்கிறீங்களா? என கடுப்பாக கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க: "கில்லி" படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரா இது?... கொழு,கொழு அழகில் கும்முனு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்...!

மேலும் ஸ்டாலின், ராஜீவ் காந்தி, விஜயகாந்த் என அரசியல் கட்சி தலைவர்கள் பலரையும் நக்கலாக பேசி வரும் சீமானின் முகத்தை தொடர்ந்து வெளிக்கொண்டு வருவேன். இப்ப எதுக்கு ரஜினி சாரை புடிச்சியிருக்கீங்க உங்க மேல இருக்கிற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கிறதுக்கா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.