தல படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானாலே தாறுமாறு கெத்து காட்டும் ரசிகர்கள் இதை விட்டு விடுவார்களா என்ன?.... மீம்ஸ், டி.வி.சேனல்களில் ஒளிபரப்பான பிரேக்கிங் கார்டு என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பரவவிட்டு வருகின்றனர். 

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் அவர்கள் நிதி உதவி வழங்காதது மிகப்பெரிய குற்றச்சாட்டாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தல அஜித் மத்திய அரசின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், பெப்சி தொழிலாளர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 1.25 கோடி ரூபாயை ஒரே நாளில் நிதியாக வாரிக்கொடுத்துள்ளார். அஜித்தின் இந்த செயலை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். 

ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையை வாரிக்கொடுத்த அஜித்தை கொண்டாடும் விதமாக தல ரசிகர்கள் #PerfectCitizenTHALAAJITH என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தளபதியின் தீவிர ரசிகரும், மாஸ்டர் படத்தில் நடித்துள்ளவருமான நடிகர் சாந்தனு கூட அஜித்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 

Scroll to load tweet…

எப்போதுமே தான் செய்யும் உதவியை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார் அஜித். ஆனால் இந்த முறை அவர் செய்த இந்த செயல் தொலைக்காட்சி, சோசியல் மீடியா என அனைத்திலும் வெளியாகிவிட்டது. இன்றைய பிரேக்கிங் நியூஸே தல தான் என்பது போல், அவரது ரசிகர்கள் வேற லெவலுக்கு மாஸ் காட்டி வருகின்றனர். 

Scroll to load tweet…

தல படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானாலே தாறுமாறு கெத்து காட்டும் ரசிகர்கள் இதை விட்டு விடுவார்களா என்ன?.... மீம்ஸ், டி.வி.சேனல்களில் ஒளிபரப்பான பிரேக்கிங் கார்டு என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பரவவிட்டு வருகின்றனர்.