தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த திஷா கடந்த 27ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிரடி விசாரணையில் இறங்கிய போலீசார், உதவி செய்வதாக கூறி ஒரு லாரி டிரைவர் உள்பட 4 பேர் திஷாவை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததைக் கண்டுபிடித்தனர். இந்த கொலை சம்பவம் நாடு முழுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளைக் ஆதாரமாக கொண்டு போலீசார் 4 பேரைக் கைது செய்தனர். 

இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக திஷா எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 4 பேரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட இந்திய மக்கள் இளம் பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்றவர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கொண்டாடி வருகின்றனர். தக்க சமயத்தில் நீதி வழங்கப்பட்டதாக தெலங்கானா போலீஸை மக்கள் தலைமேல் வைத்து கொண்டாடி வருகின்றனர். இதனிடையே டுவிட்டரில் #Encounter, #HyderabadEncounter, #HyderabadPolice, #JusticeForDisha போன்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

நேற்று முதல் சோசியல் மீடியாவில் தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், தல அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான சைராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மிக முக்கியமான வசனமான நோ மீன்ஸ் நோ என்ற வார்த்தையுடன் அஜித்குமார் போலீஸ் கெட்டப்பில் கெத்தாக இருக்கும் போட்டோவை வைத்து போஸ்டர் அடித்துள்ளனர். தெலங்கானா போலீசாருக்கு தல அஜித் ரசிகர்கள் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து வாழ்த்து கூறியுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெற லெவலுக்கு வைரலாகி வருகிறது.