அஜித் கேரியரிலேயே மிகவும் சிறப்பான படமாக அமைந்தது நேர்கொண்ட பார்வை. காலம் எவ்வளவு மாறினாலும் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், என்ன உடுத்த வேண்டும், எப்படி பழக வேண்டும் என சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் எழுதாத சட்டங்களை இந்த திரைப்படம் உறுதியோடு கேள்வி கேட்டது. பெண்ணை பாதுகாப்பாக இருக்கச் சொல்லும் சமூகம், ஆணை ஒழுக்கமாக இருக்கச் சொல்வதில்லை என்பதை அழுத்தமாய் பேசிய ‘நேர்கொண்ட பார்வை’யை ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடினர். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்த உற்சாகத்தில் மீண்டும் இதே டீமுடன் கைகோர்த்துள்ள அஜித், வலிமை படப்பிடிப்பில் படுபிசியாக நடித்து வருகிறார். இந்த சமயத்தில் பெண்கள் பாதுகாப்பை முன்னிருந்து அஜித் ரசிகர்கள் செய்துள்ள காரியம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் 4 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருந்தாலும் நாட்டில் இன்றளவும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

அதை தடுக்கும் விதமாக தமிழகத்தில் காவலன் என்ற செல்போன் ஆப்பை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியை பெண்களிடம் கொண்டு செல்லும் விதமாக அஜித் பட காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்ட மீம்ஸ்களை காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தர்ஷனை கதறவிட்டு... காதலர் தினத்தில் துள்ளாட்டம் போட்ட சனம் ஷெட்டி... வைரலாகும் ஹாட் போட்டோஸ்...!

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், காவலன்  செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அஜித் ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு ராயல் சல்யூட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.