தற்போது அனைத்திற்கும் உச்சகட்டமாக அஜித் ரசிகர்கள் சிலர் செய்திருக்கும் காரியம் அவருடைய நற்பெயருக்கு களக்கம் விளைக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங் கிட்டதட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் தல அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது தான் போனிகபூர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட ஒரே ஒரு அறிவிப்பு. இதனால் சோசியல் மீடியா பக்கம் போனாலே வலிமை அப்டேட் எங்கே? என்பதை தான் பார்க்க முடிகிறது.

ஆனால் எத்தனை விதமான ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தும் வலிமை படக்குழு அப்டேட் கொடுப்பதாக இல்லை. இதனால் நொந்து போன தல ஃபேன்ஸ் திருச்செந்தூர் முருகனில் ஆரம்பித்து, தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை அப்டேட் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்தில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி... ஷாக்கான ரசிகர்கள்...!
தற்போது அனைத்திற்கும் உச்சகட்டமாக அஜித் ரசிகர்கள் சிலர் செய்திருக்கும் காரியம் அவருடைய நற்பெயருக்கு களக்கம் விளைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தார். அப்போது சாலையின் இருபுறத்திலும் ஏராளமான தொண்டர்கள் கூடி நின்று வரவேற்பு கொடுத்தனர். அந்த கூட்டத்திற்கு இடையே கையில் ‘வலிமை அப்டேட்’ பதாகைகளை தாங்கியபடி நிற்கும் இளைஞர்கள் சிலர் பிரதமரின் கார் கடந்து செல்லும் போது ‘அய்யா வலிமை அப்டேட்’ என காத்துகின்றனர்.

இதையும் படிங்க: பிரதமரை வரவேற்க சென்ற சிவாஜி மகனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி... நெகிழ்ந்து போன ராம்குமார்...!
அஜித் ரசிகர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எடுத்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் தல ரசிகர்கள் சிலரே கூட இப்படியெல்லாம் தேவையில்லாத வேலைகளை செய்து அஜித்தின் இமேஜை டெமேஜ் செய்துவிடாதீர்கள் என தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரதமரை வரவேற்க கூடியிருந்த மக்களிடையே அஜித் ரசிகர்கள் செய்த இந்த காரியம் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ...
