தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜய் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம், புகழ், பெயர் என எல்லாம் ஒரே அளவில் இருக்கிறது. தல, தளபதி ஃபேன்ஸ்  தான் வேண்டாத விஷயங்களை எல்லாம் வைத்து ட்விட்டரில் கட்டி உருள்கிறார்களோ தவிர, அஜித், விஜய் இருவருமே நல்ல நண்பர்களாக தான் வலம் வருகின்றனர். 

இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

சமீபத்தில் மாஸ்டர் பட இசை வெளியிட்டு விழாவில் கூட எனது நண்பர் அஜித் மாதிரி கோர்ட், சூட்டில் வந்திருக்கிறேன் என்று விஜய் சொல்ல நண்பர் அஜித் என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. அதற்கு கைமாறு செய்யும் விதமாக அஜித் தற்போது அசத்தலான காரியம் ஒன்றை செய்துள்ளார். 

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

அதாவது, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமாத்துறை சார்ந்த படிப்பை படித்து வருகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் விஜய் மகன் கனடாவிலேயே தங்க வேண்டிய சூழலால் ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனாவின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் மகனை பிரிந்திருப்பதை நினைத்து தளபதி விஜய் மிகவும் சோகத்தில் ஆழ்த்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விஜய் தரப்பில் சஞ்சய் நலமாகவும்,பாதுகாப்பாகவும் இருப்பதாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!

இந்நிலையில் தல அஜித், விஜய்க்கு போன் செய்து கனடாவில் இருக்கும் சஞ்சய் எப்படி இருக்கிறார் என்று நலம் விசாரித்துள்ளாராம். பிரச்சனை எதுவும் இல்லாமல் சஞ்சய் பாதுகாப்பாக இருக்கிறாரா? போன்ற தகவல்களை கேட்டுள்ளார். சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் அவர்களது பிள்ளைகளின் நலன் என்று வரும் போது சிறந்த அப்பாக்களாக செயல்படுபவர்கள் ஆயிற்றே இருவரும். அஜித், விஜய்க்கு இடையே உள்ள நட்பை அவரது ரசிகர்கள் புரிந்து கொண்டால் சரி...!