நாளை தல அஜித் தனது 49வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்த வாரம் முழுவதுமே ட்விட்டரில் தல ராஜ்ஜியம் என்று சொல்லும் அளவிற்கு விதவிதமான ஹேஷ்டேக்குகளை உருவாக்கி அஜித் ரசிகர்கள் தாறுமாறாக தெறிக்கவிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட காமென் டி.பி. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது. 

இந்நிலையில் கொரோனா பிரச்சனை உச்சத்தில் இருக்கும் இந்த சமயத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை போட்டுவிட்டார். அதனால் தான் பிறந்த நாள் அன்று மாஸ் காட்ட வைத்திருந்த காமென் டி.பி.யை கூட இரண்டு நாட்களுக்கு முன்பு ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அஜித் ரசிகர்கள் தள்ளப்பட்டனர். 

இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

தற்போது நாளை பிறக்க உள்ள அஜித்தின் பிறந்த நாளை வேற லெவலுக்கு கொண்டாடுவதற்காக தல ரசிகர்கள்  #HBDDearestThalaAJITH என்ற ஹேஷ்டேக்கை அறிமுகம் செய்துள்ளனர். அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அஜித்திற்கு வாழ்த்து கூறுங்கள் என்று அன்பு கட்டளை போட, அந்த ஹேஷ்டேக் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

 #HBDDearestThalaAJITH  என்ற ஹேஷ்டேக் அறிமுகம் செய்யப்பட்ட 2 மணி நேரத்திலேயே கிட்டதட்ட 2 மில்லியன் ட்வீட்களை பெற்று இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. என்ன தான் போனி கபூர் கொரோனா பிரச்சனை முடியும் வரை வலிமை பற்றி அப்டேட் கிடையாது என்று கறாராக சொன்னாலும் #Valimai ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். என்ன தான் இருந்தாலும் தல படம் இல்லையா?... அதனால் #Valimai ஹேஷ்டேக் 1.21 மில்லியன் ட்வீட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.