விஜய், அஜித் இருவரும் விரைவில் ஒரே நாட்டில் படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

மாஸ்டர் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தளபதி 65 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் பீஸ்ட் என பெயரிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்ததாக கூறப்படுகிறது. ஜார்ஜியாவில் அனல் பறக்கும் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படக்குழு ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அங்கு மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதேபோல் தல அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் வலிமை பட ஷூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்தில் அஜித் சம்பந்தமான ஆக்‌ஷன் காட்சிகளுக்களை படமாக்குவதற்காக படக்குழு ஸ்பெயின் பறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளிலும் கிடுக்குப்பிடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே படக்குழு ஸ்பெயின் போக வேண்டிய பிளானை மாற்றி, ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் விஜய், அஜித் படப்பிடிப்பு ஒரே சமயத்தில் நடக்கலாம் என்ற தகவல் கசிந்துள்ளதால் தல, தளபதி ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.