Thala Ajith and Boney Kapoor to join hands
அஜித் நடிக்கும் அடுத்த படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருக்கிறார். சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.jpg)
அஜித், சிவா கூட்டணியில் உருவாக உள்ள அடுத்தப்படம் ‘விசுவாசம்’. அஜித் மற்றும் சிவா தொடர்ந்து நான்காவது முறையாக இணைந்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் டி.இமான் இசையமைகிறார். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு என 3 நகைச்சுவை நடிகர்கள் தேர்வாகியுள்ளனர்.

.jpg)
அஜித் மற்றும் வினோத் இணையும் இந்த படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதற்காக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சிவாவின் 'விசுவாசம்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
