thadi balaji wife nithiya press intraction

விஜய், அஜித், ரஜினிகாந்த் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் காமெடி நடிகர் தாடி பாலாஜி. இவருக்கும் இவருடைய மனைவி நித்தியாவிற்கும் கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுவிட்டனர்.

மேலும் தாடி பாலாஜி, அவருடைய மனைவிக்கும் அவருடைய ஆண் நண்பர் ஒருவருக்கும் தவறான உறவு இருப்பதாகவும் நித்தியா காவல் துறை அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதாகவும் கூறி, கமிஷ்னர் அலுவலகத்திற்குச் சென்று கடந்த வாரம் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் தாடி பாலாஜியின் மனைவி நித்தியா, தன்னைப் பற்றி தன்னுடைய கணவர் வேண்டுமென்றே பல வதந்திகளைப் பரப்பி வருவதாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

இதில் அவர் கூறியுள்ளதாவது... என்னைப் பற்றி பரவும் வதந்திகள் எனக்கு மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நான் மட்டும் அல்லாமல் என்னுடைய குழந்தையும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. என்னுடைய கணவர் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி என்மீது சந்தேகப்பட்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் ஆனால் அவர் கூறுவது அனைத்தும் பொய்.

நான் என்னுடைய ஆண் நண்பர் ஒருவருடன் தவறான உறவில் இருப்பதாகக் கூறுகிறார். உண்மையில் அவர் ஒரு நல்ல நண்பர் இது போன்ற வதந்தி பரவியதில் இருந்து அவர் என்னை சந்திக்கக் கூட சங்கடப்படுகிறார். அதே போல் காவல் துறையைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாகவும் அவர் எனக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாகவும் கூறுகிறார். அதெல்லாம் சுத்த பொய், எனக்கு யாரும் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என கூறியுள்ளார் நித்தியா.

இதைத்தொடர்ந்து பேசிய நித்தியா, மனோஜ் என்பவர் பாலாஜியின் நண்பர் தான்! அவரை எங்களுக்கு மூன்று வருடமாகத் தெரியும். தற்போது மனோஜ் எனக்கு உதவி செய்து வருவதால் பாலாஜி இதுபோன்ற கட்டுக்கதைகளை கூறி வருகிறார். பாலாஜி என்னை தாக்கி நான் மருத்துவமனையில் இருந்த போது என்னுடைய குழந்தையை கவனித்து கொண்டது மனோஜ் அவர்களின் தாயார் தான் எனக் கூறிய நித்தியா, ஒரு திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டுள்ளார்.

பாலாஜியின் நண்பர் நவீன் என்பவர் எனக்கு பாலாஜியிடம் இருந்து விவாகரத்து வாங்கித் தருவதாகக் கூறி, என்னிடம் தவறாக நடந்துகொண்டார். ஆனால் அவர் தற்போது பாலாஜியிடம் சேர்ந்துகொண்டு என்னைப்பற்றி காவல் நிலையத்தில் பல பொய்களை அடுக்கடுக்காகக் கூறினார் என்று நித்யா தெரிவித்துள்ளார்.