காமெடி நடிகர் தாடி பாலாஜி, மதம் மாறிய சம்பவம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தாடி பாலாஜி ஏன்? மதம் மாறினேன் என்கிற காரணத்தையும் ரசிகர்களுக்கு வெளிப்படையாக கூறியுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாகவே,  மனைவி நித்யா மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அதில் இருந்து தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் தாடி பாலாஜி.

இவர் ஏற்கனவே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், இந்து மாதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறினார். இதனால் ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

மதம் மாறியதால்,  தான் பல வகைகளில் துன்பங்களை அனுபவித்து வந்த தாகவும், இதன் காரணமாக சொந்தபந்தங்களுடைய விசேஷங்களுக்கு கூட செல்ல முடியாமலும் இருந்ததாக கூறியுள்ளார் தாடி பாலாஜி. 

மேலும் நம்முடைய வரலாறு கலாச்சாரத்தை இழந்து, அடிமை போல் வாழ வேண்டிய நிலை உருவானதாகவும் இதனால் வேதனை அடைந்த தாகவும் இதனால் மீண்டும் தன்னுடைய தாய் மதத்திற்கே திரும்பியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இவர் முதலில் மதம் மாறியபோது அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், தற்ப்போது மீண்டும் இவர் இந்து மதத்திற்கே மாறியுள்ளதால் குழப்பத்தில் இருந்தனர். இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் பாலாஜி மேற்கொண்ட விஷயங்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.