காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்தியா இருவரும் கடந்த ஆண்டு ஏற்றப்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். மேலும் நித்தியா இனி கணவருடன் வாழ போவதில்லை என முடிவு செய்து விவாகரத்து பெற நீதி மன்றத்தை நாடினார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நித்தியா பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் இருந்து வந்த அழைப்பை ஏற்று கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் செல்வதை அறிந்து, தாடி பாலாஜியும் மனைவியை சமாதான படுத்துவதற்காக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது நாம் அறிந்தது தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் இருவரும் சமாதானம் ஆகி, மீண்டும் தங்களுடைய வாழ்க்கையை துவங்குவார்கள் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில்,  கடந்த இரண்டு வாரத்திற்கு முன்  மீண்டும் தாடி பாலாஜி மீது நித்யா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில்... தாடி பாலாஜி தன்னையும் தனது மகளையும் மிரட்டுவதாகவும், குடித்துவிட்டு நண்பர்களுடன் வந்து கதவு, ஜன்னல்களை உடைத்து தொல்லை கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் போலீசார் முன் ஆஜரான தாடி பாலாஜி இந்த புகார் குறித்து விளக்கம் கொடுத்ததாக கூறப்பட்டது.

இதைதொடந்து தற்போது இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து, தன்னுடைய பக்கத்தில் இருக்கும் நியாயம் பற்றியும், நித்தியாவை இப்படி ஆட்டி வைப்பவர் யார் என்றும் கூறியுள்ளார் தாடி பாலாஜி.

இது குறித்தும் அவர் கூறுகையில், "பலமுறை யோசித்த பின்பு தான் இந்த பிரஸ் மீட் வைக்குறேன்... நானும் நித்தியாவும், காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். தற்போது என்களுக்கு ஒரு அழகான குழந்தை இருக்கிறாள். ஆரம்பத்தில் எல்லா குடும்பங்களை போன்றும் சந்தோஷமாக தான் நாங்களுக்கும் இருந்தோம்.

உதாரணத்திற்கு நான் வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றால் கூட என் சம்பளத்தை குறைத்து கொண்டு நான் செல்லும் இடங்களுக்கு அவர்களையும் அழைத்து செல்வேன்.  சில சமயங்களில் என்னுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டால் கூட நித்தியா பொறாமை படுவார். கணவனின் வளர்ச்சியில் ஏன் அவர் பொறாமை படுகிறார் என எனக்கு தெரியாது.

தற்போது, என் குடும்பம் இப்படி மன உளைச்சலுக்கு ஆளானதற்கு முக்கிய காரணம் எஸ்.ஐ. மனோஜ் குமார் என்பவர்தான். குடும்ப நண்பராக அறிமுகமான அவர் பின் தன்னுடைய மனைவி நித்தியாவிடம் பழக துவங்கினார். இவர்கள் இருவரும் பேசுவதற்காகவே 5 திற்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்துள்ளனர். மேலும் நானே, அல்லது என்னுடைய வழக்கறிஞர் என யார் நித்தியாவிடம் பேசினாலும் உடனடியாக எஸ்.ஐ.மனோஜ் குமாருக்கு  தெரிந்து விடும். 

அவருடன் சேர்ந்து கொண்டு தான் நித்தியா... பொய் பித்தலாட்டங்கள் செய்து கொண்டு இருக்கிறார். தன்மீது பல புகார்களை கூறியபோதும் இதுவரை ஒரு முறை கூட எந்த ஊடகத்திற்கு நான் பேட்டி கொடுத்தது இல்லை. இப்போது இந்த பேட்டி கொடுப்பது கூட தன்னுடைய மகளின் நலன் கருதி என உருக்கமாக கூறியுள்ளார்.