‘வால்மீகி’என்று பெயர் சூட்டப்பட்டுள்ள படம் தங்கள் இனத்தை இழிவுபடுத்துவதாக உள்ளதாகவும் எனவே அப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஆந்திர வால்மீகி வம்சாவளி மக்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. இந்த படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பாபி சிம்பாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்த நிலையில் தமிழில் சூப்பர்ஹிட்டான 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு ‘வால்மீகி’என்ற பெயரில் ரீமேக் செய்ய ஆரம்பித்தனர்.

 பாபிசிம்ஹா நடித்த வேடத்தில், தெலுங்நடிக்க   சித்தார்த் நடித்த கேரக்டரில், நடிகர் அதர்வா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தின் மூலம் அதர்வா தெலுங்கு திரையுலகில்  அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஹரிஷ் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏப்ரலில் துவங்கிய இப்படம் ஏறத்தாழ முடியும் தறுவாயில் உள்ள நிலையில் ஆந்திர வம்சாவளி வால்மீகி வகையறாவைச் சேர்ந்த மக்கள், ‘ஒரு மகா புருஷர் ஒருவருடைய பெயரை சாதாரண திரைப்ப்படம் ஒன்றுக்கு வைப்பதை எதிர்ப்பதாகவும், உடனே படத்தலைப்பை மாற்றவேண்டும் எனவும் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.