தெலுங்கில் உருவாக இருக்கும் ‘ராட்சசன்’ படத்திலும் ‘ராட்சசன்’ அரிதாரம் பூசுவதற்கு ‘நான்’ சரவணன் முயற்சி செய்து வருகிறார்.

தமிழில் பெரும் வெற்றி பெற்ற ‘ராட்சசன்’ படம் தெலுங்கில் எடுக்கப்பட உள்ளது. இந்தப் படத்தை சுதீர் வர்மா இயக்க உள்ளார். தமிழ் ‘ராட்சச’னில் டீச்சராக  நடித்த அமலாபால், தெலுங்கு ‘ராட்சசன்’ படத்திலும் நாயகியாக நடிப்பர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே தமிழ் ‘ராசச’னில் கிறிஸ்டோபராக நடித்து எல்லோரையும் திகிலில் உறைய வைத்த ‘நான்’ சரவணன், தெலுங்கு ராட்சசனிலும் நடிக்க ஆர்வத்தில் உள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் அமலா பாலை தொடர்புகொண்டு, தெலுங்கு படத்தில் நடிக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

தெலுங்கு படத்தில் நடிக்க உதவுவதாக அமலாபாலும் சரவணனுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார். இதனால், தெலுங்கில் எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையில் சரவணன் இருக்கிறார். இந்த விஷயத்தை நெருங்கிய நண்பர்களிடமும் கூறி வருகிறார்.