லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் தான் என்றில்லாமல் உலகம் முழுவதுமே திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் சாதனை படைத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. குறிப்பாக தெலங்கானா, ஆந்திராவில் வெளியான படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

தெலுங்கில் மட்டும் மாஸ்டர் திரைப்படம் 22 கோடி வரை வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார்களின் நேரடி படங்களுக்கு போட்டி, போடும் விதமாக மாஸ்டர் திரைப்படம் வெற்றி கண்டுள்ளதால் அங்குள்ள விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதையடுத்து அந்த படத்தை தெலுங்கி வாங்கி வெளியிட்ட நிறுவனத்தின் சார்பாக தளபதி விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். அதுகுறித்து பதிவிட்டுள்ள மகேஷ் என்பவ, எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஜய்யை சந்தித்து மாஸ்டர் படத்தின் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்தேன். நடிகர் விஜய்யும் தெலுங்கு ரசிகர்கள் செலுத்திய அன்பிற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்தார்.