valimai Trailer : வலிமை ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டி வரும் வேளையில் அஜித்துக்கு வில்லனாக வரும் பைக்கர் கிங் யார் என்னும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

வெளியீட்டுக்கு ஒரு மாதமே எஞ்சி உள்ளதால், படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

YouTube video player

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார். அஜித்துக்கு இணையான ஸ்டாண்டில் கலக்கியுள்ள வபைக்கர் கிங் யார் என்னும் கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும்கார்த்திகேயா கும்மகொண்டா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் தெலுங்கில் சமீபத்தில் ஆர்எக்ஸ் 100 மற்றும் 90எம்எல் படங்களில் மாஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.